இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் -  முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை!

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கட்சியின் உயர்மட்ட அவசரச் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட 800-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அமைப்பு ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

நிர்வாக வசதிக்காகத் தற்போதுள்ள மாவட்டக் கழக எல்லைகளை மறுவரையறை செய்து, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100-க்கும் மேல் கூட்டுவது, கட்சிப் பதவிகள் மற்றும் புதிய பொறுப்புகளில் இளைஞர்களுக்கும் மகளிர்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குவது. உட்கட்சித் தேர்தல்களை முறைப்படி நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணையைத் தீர்மானிப்பது.