திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து - தவெக அரசு நடவடிக்கை!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகத்திற்காகக் கொண்டு வரப்பட்ட 5 முக்கிய டெண்டர்களை தற்போதைய தமிழ்நாடு அரசு ரத்து செய்து இன்று அறிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தங்களில், முறைகேடுகள் அல்லது மறுஆய்வு காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசுப் பேருந்துகளுக்காக 60,000 டயர்கள் வாங்குவதற்காகப் போடப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டம் வாங்குவதற்காகக் கோரப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் தற்போது எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதைத் துல்லியமாக அறியப் பயன்படும் ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதற்காகப் போடப்பட்டிருந்த டெண்டர் உட்பட மொத்தம் 5 முக்கியப் போக்குவரத்து ஒப்பந்தங்களைத் தமிழ்நாடு அரசு தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது.
திமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போதைய தவெக அரசு போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்தவும், புதிய உதிரிபாகங்களை வாங்கவும் மிக விரைவில் புதிய வெளிப்படையான டெண்டர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு தமிழக அரசியல் மற்றும் அரசுத் துறை வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.