காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் ரத்து - திமுக அரசு கண்டனம்!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டம் தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டம் ஆகியவற்றை தவெக அரசு தற்போது முறைப்படி ரத்து செய்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் சுமார் 62.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 18 கிராமங்களை உள்ளடக்கிய புதிய நகரைப் பெருநகரமாக மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த திடீர் முடிவிற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்போரூர், திருமழிசை, மீஞ்சூர், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட பிற புதுநகர் வளர்ச்சித் திட்டங்களின் எதிர்காரியமும் இதன் மூலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அக்கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.