திமுக அவசர ஆலோசனை... 6 தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதம் - கொளத்தூர் குறித்து துரைமுருகன் பளிச் பதில்!
இடைத்தேர்தல்கள் தொடர்பாகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இன்றைய ஆலோசனையில் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும், கொளத்தூர் இடைத்தேர்தல் தொடர்பாக முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் முடிவெடுத்துப் பேசுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொகுதி நிலவரம் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த அடுத்தகட்ட நகர்வுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.