தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிகாரிகளைக் காத்தது திமுக அரசு - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் அதன் மீதான நடவடிக்கை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டும், கடந்த திமுக அரசு அவர்களைக் காப்பாற்ற முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சருக்கு யாரும் உபதேசம் செய்யத் தேவையில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் இன்று அந்த இடத்தில் அமர்ந்திருப்பதற்குத் தற்போதைய முதலமைச்சர் வழிகாட்டுதலே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக இருந்தால் அறிவாலயத்தில் போய் போராடலாமே தவிர, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் நிலவும் போதைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.