திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை மனு!

 

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தேவையான முக்கியத் தகவல்களைப் பெறவும், கூடுதல் விவரங்களைச் சேகரிக்கவும் அவரைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனப் போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை தாக்கல் செய்துள்ள இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது. மார்க்கண்டேயன் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.