திமுக எம்பி கனிமொழி மம்தா பானர்ஜியுடன் திடீர் சந்திப்பு -  தேசியளவில் மூன்றாவது அணியா?!

 

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது தேசிய அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/AhAN03wLJ3I?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/AhAN03wLJ3I/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்துத் திமுக தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வரும் 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தேசிய அளவில் புதிய மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட முன்னெடுப்பாகவே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக திமுக தரப்பில் உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் வரிசையில், தற்போதைய இந்தச் சந்திப்பு தேசிய எதிர்க்கட்சிகளிடையே புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.