இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்!
Sep 12, 2026, 09:15 IST
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் விஜய் விமர்சித்ததைக் கண்டித்து, திமுக சார்பில் இன்று செப்டம்பர் 12 தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக தலைமையின் அறிவிப்புக்கிணங்க, ஏனைய மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவினர் திரண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.