தவெகவை ஜெயிக்க வச்சதே நீங்க தான்... திமுக  மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ரகுபதி - உதயம் சண்முகம் மோதல்!

 

புதுக்கோட்டை திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கழக மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது உதயம் சண்முகம் திடீரென மேடையேறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த ரகுபதி, அங்கிருந்த மைக்கை பிடுங்கி "தவெகவை ஜெயிக்க வச்சதே நீங்கதான்" என்று ஆவேசமாகக் கூறினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் மூத்த தலைவர்கள் ஒருவரையொருவர் மாற்றிப் பேசிக்கொண்ட இந்தச் சம்பவத்தால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்திலிருந்த மற்ற நிர்வாகிகள் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். இந்தச் சம்பவம் திமுக வட்டாரத்தில் தற்போது பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.