நாளை தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவு - மிஸ் பண்ணாம கலந்துக்கோங்க!

 

நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரப்பூர்வமாகச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

நாளை காலை சரியாக 11 மணிக்குக் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்த முன்கூட்டத் தகவலைப் பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில் கிராம ஊராட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள், நிதிநிலை அறிக்கை, புதிய வளர்ச்சிப் பணிகள், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.