உடனே இதைப் பண்ணுங்க... இனி வாட்ஸ்ஆப் மூலமே இலவசமாக ரூ.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் கார்டு பெறலாம்!

 

மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதற்கான காப்பீட்டு அட்டையை இனி மிக எளிதாக வாட்ஸ்ஆப் வழியிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முதற்கட்டமாகத் தேசிய சுகாதார முகமையின் 'ஆயுஷ்மான் சாரதி' அமைப்பின் +91 72908 23838 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் எண்ணிற்கு 'Hi' எனச் செய்தி அனுப்ப வேண்டும். செய்தி அனுப்பியதும் தோன்றும் தானியங்கி சாட்பாட் வழிகாட்டலில் 'My Ayushman Card' என்ற தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து திரையில் கேட்கப்படும் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் OTP-ஐப் பதிவிட்டு e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும்.

சரிபார்ப்பு முடிவடைந்ததும் சில நிமிடங்களிலேயே உங்களுக்கான ஆயுஷ்மான் மருத்துவக் கார்டு PDF வடிவில் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். அதனைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.