இப்போதான் இந்த சட்டத்தையே கொண்டு வாரீங்களா.. இங்கிலாந்தில் திருமண வயது 18 ஆக உயர்வு !

 

இந்தியாவில் திருமணத்திறான குறைந்தபட்ச வயது 18 என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதாவது பெண்களுக்கு 18 வயதாகவும், ஆண்களுக்கு 21 வயதாகவும் திருமண சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்தால் குழந்தைகள் திருமணமாக கருதி சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. 

அதாவது, குழந்தைகளுக்கு கட்டாய திருமணத்தை தடுக்கும் வகையில் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது   தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது போக்சோவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

ஆனால், இங்கிலாந்தில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயதாக 18 என இப்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து சட்டதிட்டங்களை பின்பற்றிதான் இந்தியாவுக்கு சட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் இப்போதுதான் இந்த நடவடிக்கை என்பது வியப்பாக உள்ளது.

அங்கு இதற்கு முன் 16, 17 வயதுகளை அடைந்தவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது.

ஆனால் இதனை தடுக்க சட்டம் இல்லை. இந்த சூழலில் இதுபோன்ற கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18ஆக உயர்த்தி சட்டம் கொண்டு வந்துள்ளன. இனி 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.