'உங்களுக்காக சண்டை போடணுமா?' - ரூ.2,600 கட்டணம் வசூலித்து சம்பாதிக்கும் இளைஞர்!

 

சீனாவில் வாடிக்கையாளர்களின் சார்பில் போனில் வாக்குவாதம் செய்து நியாயம் கேட்டுத் தரும் வினோதமான ஒரு புதிய தொழில் தொடங்‍கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 

சீனா, குவாங்சோ நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுடன் நேரில் அல்லது போனில் வாக்குவாதம் செய்யத் தயங்குபவர்களுக்காகத் தானே முன்வந்து சண்டை போடும் சேவையைத் தொடங்கியுள்ளார். தனது வாடிக்கையாளர்களின் சார்பில் எதிர்தரப்பினரிடம் போனில் பேசி வாக்குவாதம் செய்ய இவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 (சுமார் 220 யுவான்) கட்டணமாக வசூலிக்கிறார். 

வேலை செய்த நிறுவனத்தில் முறையான சம்பளம் தராத முதலாளிகளிடம் கேள்வி கேட்பது, கடைகளில் வாங்கிய பொருட்கள்/சேவைகள் மோசமாக இருந்தால் அதற்காகக் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து ரீஃபண்ட் பெற்றுத் தருவது, மற்றும் பக்கத்து வீட்டுப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட விவகாரங்களில் வாடிக்கையாளர்களுக்காக இவர் நியாயமாகக் குரல் கொடுக்கிறார். 

மற்றவர்களிடம் சண்டை போடத் தயங்கும் அமைதியான மனிதர்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அசாதாரணமான தொழில், தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.