"எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் எனச் சொல்வதா?" - கே.என்.நேரு ஆவேசம்!

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய மாஜி அமைச்சர் கே.என்.நேரு, "எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் என்று சொல்வதா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், தற்போது ஆட்சியும் அதிகாரமும் காவல்துறையும் முழுமையாக உங்கள் கையின் கீழ் தான் உள்ளது என்றும், துறைகளைச் முறையாக ஆய்வு செய்து தவறு நடந்திருந்தால் தயங்காமல் உரிய நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.