நெஞ்சை பதறவைக்கும் வீடியோ... தெரு நாய்களைப் பிடித்து ஆற்றில் வீசிய முதியவர் மற்றும் பேரன் !
ஹரியானா மாநிலத்தில், ஒரு முதியவரும் அவரது பேரனும் இணைந்து தங்களின் பகுதியில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற தெரு நாய்களை மிகவும் இரக்கமற்ற முறையில் பிடித்து அருகில் உள்ள ஆற்றில் வீசியுள்ளனர். விலங்குகளை வதைக்கும் இந்த மனிதநேயமற்ற செயல் குறித்த பதிவு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, சமூக வலைத்தளங்கள் முழுவதும் மிக வேகமாகப் பரவி பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.
ANIMAL CRUELTY CREATES UNSAFE COMMUNITIES!
— Dev (@HoomanDecoder) July 6, 2026
📍Shivpuri Mohalla, near Jageshwar Mandir, Palwal, Haryana
This old man is Hari Sharma. He is a habitual abuser and killer who picks up dogs from the locality with the help of his grandson and throws them into the river. His entire… pic.twitter.com/eaL7wU9q4r
ஆற்றின் கரையில் நின்றுகொண்டு வாயில்லா ஜீவன்களைத் தூக்கி எறியும் இந்த விபரீதக் காட்சி, பார்ப்போரின் நெஞ்சில் ஆத்திரத்தையும் மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, இந்த அநாகரிகமான செயல் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறி வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த முதியவர் மற்றும் அவரது பேரன் ஆகிய இருவர் மீதும் உடனடியாகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கொடூரமான வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர், ஹரியானா காவல்துறையைச் சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி டேக் செய்து தங்களின் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். மனிதநேயமற்ற முறையில் விலங்குகளை வதைத்த அந்த இருவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப் போலீசார் தங்களின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.