2026ம் ஆண்டிற்கான உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா தேர்வு!
வியாட்நாம் நாட்டில் நடைபெற்ற கோலாகலமான உலக அழகிப் போட்டி இறுதி நிகழ்வில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரி புதிய உலக அழகியான ஜோஹெய்ரி மோலாவுக்கு மகுடம் சூட்டிக் கவுரவித்தார்.
இப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெயின்ஸ் முதலாம் இடத்தையும் (முதல் ரன்னர்-அப்), மலேசியாவின் டானுசியா செட்டி இரண்டாம் இடத்தையும் (இரண்டாம் ரன்னர்-அப்) கைப்பற்றினர்.
இறுதிச் சுற்றில் இடம்பெற்ற முதல் ஆறு போட்டியாளர்கள் பட்டியலில் மக்கள் விருப்பப் பிரிவில் வென்ற எரித்திரியாவின் ஸ்னிட் ஹப்தியாப், ஐரோப்பியப் பிராந்தியத்திற்கான ஸ்பெயினின் எலிசபெத் ரெயின்ஸ், சமூகப் பணிப் பிரிவு வெற்றியாளரான மலேசியாவின் டானுசியா செட்டி, ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்திற்காக வியட்நாப்பின் லெ கியூவென் பாவோ ங்கோக்
அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் சார்பாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா, ஆப்பிரிக்கப் பிராந்தியத்தின் சார்பாக தென் ஆப்பிரிக்காவின் ரொமாண்டா ஹொம்பிர் ஆகியோர் இடம்பிடித்துத் சிறப்பித்தனர். உலக நாடுகளின் பல்வேறு அழகிகள் பங்கேற்ற இந்தப் போட்டி உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.