“வதந்திகளை நம்பாதீங்க... நான் உயிரோடு தான் இருக்கேன்” - செஃப் தாமு விளக்கம்!
Updated: Aug 29, 2026, 12:08 IST
சமூக வலைதளங்களில் தான் இறந்துவிட்டதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, தான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தான் நலமுடன் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றிப் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
காலில் ஊசி செலுத்திக் கொண்டதன் காரணமாக மட்டுமே ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அரையிறுதிப் போட்டியில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், எனினும் அதே நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் தான் கலந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபோன்ற அடிப்படையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பதாகவும் செஃப் தாமு கேட்டுக்கொண்டுள்ளார்.