இன்று பிரதோஷ நேரத்தில் இதை செய்ய மறக்காதீங்க!
ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை பிரதோஷ தினம் வருகிறது. தேய்பிறையில் ஒரு பிரதோஷ காலமும், வளர்பிறை நாட்களில் ஒரு பிரதோஷமும் வருகிறது. பிரதோஷ காலத்தில் இதைச் சொல்லி வழிபடுவது கூடுதல் விசேஷம் தரும். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் நம் பாவவினைகளிலிருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம்.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம். அந்த வேளையில் சிவ ஆலயங்களில் யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி என்பது ஐதிகம்.
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
அவன் தாள் பணிவோம். சிவாய நம சொல்லுவோம்!