மிஸ் பண்ணாதீங்க... இன்றும் நாளையும் வானத்துல நடக்கப் போகும் அதிசயம்... வெறும் கண்ணால் பார்க்கலாம்!
இன்றும், நாளையும் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதி வானில் விண்கல் மழை பூமியின் மீது பொழிகிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு வானில் பார்க்க தவறாதீங்க. கூடவே உங்கள் குழந்தைகளுக்கும் விண்வெளி அதிசயத்தைக் காட்டுங்க.
வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் இருக்கும். விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் பூமி இருக்கும் பாதை அருகே போகும்போது புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழுகிறது. தற்போது ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம் பூமியின் பாதையின் அருகே கடந்து செல்வதால் இன்றும், நாளையும் பூமியில் விண்கல் மழை தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம் அப்படி சமீபத்தில் வந்தபோது அதன் வாலிலிருந்து தூசிகளை, சிறு கற்களை விட்டு சென்றிருக்கிறது. இதன் அருகே பூமி இன்றும் நாளையும் செல்லும் நிலையில், இன்று இரவும் நாளை அதிகாலை நேரத்திலும் விண்கல் மழையை நம்மால் பார்த்து ரசிக்க முடியும்.
நீங்கள் இருக்கும் இடத்தில் ஒளி மாசு குறைவாக இருப்பின், அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்கு 50-100 விண்கற்கள்கள் பூமியை நோக்கி விழுவதை பார்க்க முடியும். இதற்கு பெர்சீட்(Perseid) விண்கல் பொழிவு என ஆய்வாளர்கள் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த விண்கல் மழையானது ஆகஸ்ட் 24 வரை நீடிக்கும். இருப்பினும் இன்றும் நாளையும்தான் வானில் அதிகளவு பொழிவு இருப்பதால் எளிதில் தெரிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.
வடக்கு அரைகோளத்தில் உள்ள நாடுகளில் மட்டுமே இதனைப் பார்க்க முடியும். இந்தியா இந்த பகுதியில் இருப்பதால் நம்மாலும் பார்க்க முடியும். இந்தியா தவிர சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்கு ஆசியா , சைப்ரஸ், கிரீஸ் மற்றும் துருக்கி தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, வட ஆப்பிரிக்கா, எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, ஓசியானியா, வடக்கு மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளும் இதை பார்க்க முடியும்.
தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இதனைப் பார்க்கலாம். ஆனால் ஒளி மாசு குறைவாக உள்ள இடத்தில் இருந்து பார்த்தால் இதன் அழகை முழுமையாக ரசிக்கலாம். சென்னைக்கு அருகில் எனில் ஏலகிரியில் ஒளி மாசு குறைவு. அதேபோல வாணியம்பாடி ஆலங்காயம் அருகே உள்ள காவலூரில் வைணு பாப்பு விண்வெளி ஆய்வகம் இருக்கிறது. இங்கும் ஒளி மாசு குறைவுதான். இந்த இடங்களிலிருந்து பார்த்தால் விண்கல் மழையை முழுமையாக ரசிக்க முடியும்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா