மிஸ் பண்ணாதீங்க... மாதந்தோறும் அபராதம்... சொத்து வரி, தொழில் வரி செலுத்த இன்று கடைசி நாள் - மாநகராட்சி எச்சரிக்கை!

 

சென்னையில் நடப்பு ஆண்டிற்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியைச் செலுத்த இன்று (செப்டம்பர் 30) கடைசி நாளாகும் எனப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அனைத்துச் சொத்து உரிமையாளர்களும் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaicorporation.gov.in மூலமாகவோ அல்லது 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ தங்களது வரியினை எளிதாகச் செலுத்தலாம்.

குறிப்பிட்ட காலக்கெடுவான இன்றுக்குள் வரியைச் செலுத்தத் தவறினால், நிலுவைத் தொகைக்கு மாதந்தோறும் 1 சதவீதம் வீதம் அபராத வட்டி வசூலிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.