“வதந்திகளைப் பரப்பாதீங்க... சட்டமன்ற இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்” - மாணிக்கம் தாகூர்!

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இருக்கை மாற்றங்கள் குறித்து எழும் விவாதங்கள் மற்றும் வதரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் இருக்கை மாற்றப்படுவது என்பது புதிதாக ஏதும் நிகழ்வல்ல என்றும், அதுவொரு வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டமன்றக் கட்சித் தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாகவே சபாநாயகரால் இந்த இருக்கை மாற்றம் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாதாரண நடவடிக்கையில் எந்தவிதமான உள்நோக்கமோ அல்லது அரசியல் அர்த்தங்களோ இல்லை என்றும், இது குறித்துத் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது எக்ஸ் (இணையதளம்) தளப் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.