'டோரேமான்' பட இயக்குநர் சுடோமு ஷிபாயாமா காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!
Mar 21, 2026, 08:52 IST
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் ஃபேவரைட் அனிமேஷன் கதாபாத்திரமான 'டோரேமான்' (Doraemon) திரைப்படங்களின் புகழ்பெற்ற இயக்குநர் சுடோமு ஷிபாயாமா காலமானார். அவருக்கு வயது 84.
ஜப்பானிய அனிமேஷன் துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான சுடோமு ஷிபாயாமா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 84-வது வயதில் இயற்கை எய்தினார். இவரது மறைவு சர்வதேச அனிமேஷன் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1983ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வெளியான 22 டோரேமான் திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். எதிர்காலத்திலிருந்து வந்த இயந்திரப் பூனை 'டோரேமான்' மற்றும் சிறுவன் 'நோபிட்டா' ஆகியோரின் நட்பை மிக அழகாகத் திரையில் வடித்தவர்.
ஜப்பானைத் தாண்டி இந்தியா, குறிப்பாகத் தமிழகக் குழந்தைகளிடையே 'டோரேமான்' தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இவரது நுணுக்கமான இயக்கமே முக்கியக் காரணமாகும். டோரேமான் மட்டுமின்றி, ஜப்பானின் மற்றுமொரு புகழ்பெற்ற அனிமேஷன் தொடரான 'சிபி மருக்கோ-சான்' மற்றும் 'ராக்மேன்' போன்ற தொடர்களிலும் இவர் பணியாற்றி முத்திரை பதித்துள்ளார்.