undefined

இந்தியாவில் அறிமுகமானது டிரைவர் இல்லாத தானியங்கி கார்!

 

பெங்களூருவில் இந்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முதல் டிரைவர் இல்லாத தானியங்கி கார் அறிமுகமாகியுள்ளது.

விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் இணைந்து இந்த காரை உருவாக்கினர். 2019 முதல் பல்வேறு கட்டங்களில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, நகரப் போக்குவரத்து, விலங்குகள் கடக்கும் சாலை, குறுகிய வழித்தடங்கள் போன்ற நிலைகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது.

முழுமையாக இந்திய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த கார், சமீபத்தில் அந்தக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் உத்தராதி மடாதிபதி சத்யாத்ம தீர்த்த சுவாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக நிகழ்ச்சியில் மடாதிபதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் காரில் பயணித்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டிரைவர் இல்லாத கார் என்ற வகையில் இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?