இனி டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் ஆன்லைனில் பதிவிறக்கம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதில் நிலவிவரும் காலதாமதத்தைத் தவிர்ப்பதற்காக, இனி சோதனை நடைபெறும் நாளன்றே ஒரே நாளில் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் பொதுமக்கள் ஆன்லைனில் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றுகளைப் பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் வடிவில் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.