தொழிலாளியின் கை விரல்களை வெட்டிய போதை ஆசாமிகள்... கொடூரம்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது சரவணன் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். தினமும் வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த அவர், கடந்த இரவு 8 மணியளவில் பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் சாலையோரத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் குமாரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் சரவணன் அங்குவந்ததால், சந்தேகப்பட்ட குமார் அவரைத் தவறாக குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்துள்ளார். அதில், சரவணனிடம் அழுத்தம் கொடுத்து “யார் அடித்தார்கள் என்று சொல்லாவிட்டால் உன் கையை வெட்டிவிடுவேன்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் குமார், தனது நண்பர்கள் பார்த்திபன், இளையராஜா, சந்திரசேகர் ஆகியோரை அழைத்துவர, அவர்கள் சரவணனை ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்று, வேப்பமரத்தில் கட்டி வைத்து இரு கைகளிலும் உள்ள விரல்களை கொடூரமாக வெட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தில் சரவணன் தீவிரமாக காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வருவதை அறிந்து குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். பின்னர் சரவணன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமார் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!