மகிழ்ச்சிக்காக அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்தலாம் ... முதல்வரின் பேச்சுக்கு  திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்! 

 

 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக திமுக நிர்வாகி திவ்யா சத்யராஜ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் நேற்று (நவம்பர் 4) நடைபெற்ற தவெக கல்வி விருது வழங்கும் விழாவில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய விஜய், போதைப்பொருள், லஞ்சம், ஊழல் போன்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது என்றும், கல்வியில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து திமுக நிர்வாகி திவ்யா சத்யராஜ் சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.அதில், "மாணவர்களிடம் போதைப்பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என அறிவுரை கூறும் முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மகிழ்ச்சிக்காக அவ்வப்போது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்ற தொனியில் அறிவுரை கூறும் முதலமைச்சரை இதுவரை பார்த்ததில்லை. இதுதான் மாற்றமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.திவ்யா சத்யராஜின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.