துபாய் அரசு 10 நாட்கள் துக்கம் அறிவிப்பு - ஆட்சியாளரின் சகோதரர் ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் காலமானார்!

 

துபாய் ஆட்சியாளரின் சகோதரர் ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது 76-வது வயதில் காலமானதை அடுத்து, துபாயில் பத்து நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமிர்தங்களின் துணை அதிமரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் சகோதரரான ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது 76-வது வயதில் காலமானார். இவரது மறைவையொட்டி துபாயில் 10 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் துபாய் அரசு அறிவித்துள்ளது.

இந்த துக்கக் காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியப் பொது இடங்களிலும் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் அகமதுவின் மறைவுக்கு உலகத் தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.