புடவையில் 10 கி.மீ சைக்கிள் பயணம்: துபாயில் அசத்திய இந்தியப் பெண்... வைரல் வீடியோ!

 

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது தேசிய தினத்தை முன்னிட்டு, துபாயின் ஷேக் சயீத் சாலையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இந்தியப் பெண் கஞ்சனா நாயர் புடவை அணிந்து 10 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளார். அமீரக தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு ஏற்ப சிவப்பு புடவை, பச்சை ரவிக்கை மற்றும் மல்லிகைப் பூவுடன் அவர் சைக்கிள் ஓட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

துபாயில் வசித்து வரும் தொழிலதிபரும் வளரும் நடிகையுமான கஞ்சனா நாயர், சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ஓட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தச் சிரமமும் இன்றிப் பாடல்களைப் பாடிக்கொண்டே 10 கி.மீ தூரத்தைக் கடந்து சாதனை படைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

allowfullscreen

கடந்த 14 ஆண்டுகளாக வசித்து வரும் அமீரகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறியுள்ள அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது