குரு, சுக்கிரன் சாதகப் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்... சுபச் செலவா மாத்திக்கோங்க!
இன்று மார்ச் 20 வெள்ளிக்கிழமை. இன்றைய கிரக நிலவரப்படி, சந்திரன் இன்று கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் மற்றும் குருவின் சாதகமான பார்வைகளால் இந்த ராசிகாரர்களுக்கு இன்று பணவரவும், மகிழ்ச்சியும் பெருகும்.
மேஷம்: இன்று உங்களுக்கு உத்வேகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த அரசு காரியங்கள் இன்று கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். அதிர்ஷ்ட எண்: 9 , அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம் : சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்களுக்கு இன்று ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்க வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் ஆதாயம் தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம் : சந்திராஷ்டமம் விலகி நற்பலன்கள் தொடங்கும் நாள். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாலை நேரத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம் : இன்று உங்களுக்குச் செலவுகள் அதிகரிக்கும் நாள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படுவதால் சிக்கனம் தேவை. வெளிவட்டாரப் பழக்கவழக்கங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: முத்து வெள்ளை
சிம்மம் : தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்று அபரிமிதமான லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். திருமண முயற்சிகளில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல வரன் அமையும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கன்னி : சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
துலாம் : இன்று உங்களுக்குப் பொறுமை தேவைப்படும் நாள். மற்றவர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதி தரும். வேலை தேடுபவர்களுக்குச் சிறிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அதிர்ஷ்ட எண்: 8 அதி|ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
விருச்சிகம்: தனவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். புதிய வாகனம் அல்லது பூமி வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
தனுசு : குரு பகவானின் அருளால் இன்று உங்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும். வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: பொன் மஞ்சள்
மகரம்: இன்று நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் சற்று தாமதமாகவே முடியும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
கும்பம்: இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் என்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகள், ஒப்பந்தங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மௌனம் காப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
மீனம் : இன்று லாபம் தரும் நாள். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல பலனைத் தரும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியில் முடியும். மனைவி வழி உறவினர்களிடம் இருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: ஊதா