தலைநகர் டெல்லியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. பதறிய பொதுமக்கள்..!

 
தேசியத் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் முதல் நிலநடுக்கம் பிற்பகல் 2:25 மணிக்கு பட்டேகோடா பகுதியை மையமாக கொண்டு 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, பிற்பகல் 2.51 மணிக்கு மீண்டும் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அதேப்போல் பிற்பகலில் டெல்லி என்.ஆர்.சி பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாமல் வட இந்தியா சில பகுதிகளான நொய்டா, உத்தரகாண்ட், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். அவசர அவசரமாக வீடுகளை விட்டு பதறி அடித்து வெளியேறினர், இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.