உத்தரகாண்டில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு!
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
புதுடெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று மதியம் 12.51 மணியளவில் உத்தரகாண்டின் பித்தோராகர் பகுதியைக் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகு ஆகப் பதிவாகியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிப் திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது கட்டிடங்களுக்குப் பெரிய அளவிலான சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. நிலைமையை நில அதிர்வு மையமும் உள்ளூர் நிர்வாகமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.