அடுத்தடுத்து 138 முறை நிலநடுக்கம்... பிலிப்பைன்ஸில் மக்கள் கடும் அச்சம்! 

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாடே குலுங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு அடுத்தடுத்து 138 முறை தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்து பெரும் அச்சமடைந்துள்ளனர்.

அங்கு ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவான இந்த மிகக் கொடூர நிலநடுக்கத்தால் ஏராளமான பிரம்மாண்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 37 கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் சீறிப் பாய்ந்ததால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.