பிரதமரின் பேச்சு எதிரொலி... சரிய தொடங்கியது தங்கம் விலை - சவரன் ரூ.1,13,400-க்கு விற்பனை.. மேலும் குறையவே வாய்ப்பு!
இன்று காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில், மாலையில் திடீரென அதிரடியாகக் குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
தங்கத்தை தேவையில்லாமல் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் வெளிநாடுகளுக்குச் சென்று ஆடம்பர திருமண கொண்டாட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ.14,385-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி, சவரனுக்கு அதிரடியாக ரூ.1,680 குறைந்துள்ளது. இதனால் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,400 என்ற விலையிலும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,175 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க - ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச பொருளாதாரச் சூழல்களால் தங்கம் விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த மாதத்தில் ஒரு சவரன் ரூ.1.20 லட்சத்தை நெருங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.