திமுக நிர்வாகி வீட்டில் புகுந்தது அமலாக்கத்துறை !!

 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின், சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்  விவகாரம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  செந்தில் பாலாஜியைதொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரிடமும்,அவரின் மகனிடமும் விசாரணைநடத்தியிருந்தனர்.

இந்நிலையில், திமுக நிர்வாகி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.செந்தில் பாலாஜிக்காக தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனின் வீடு மற்றும் அலுவலங்களில் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, திமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனின் வீடு மற்றும் அலுவலங்களில் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, திமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வழக்கு தொடர்ந்து அது நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!