செந்தில் பாலாஜியை அதிமுகவிற்கு வளைக்க திட்டமிடும் எடப்பாடி - அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!
வழக்குகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகத் திமுக தலைமையின் ஆதரவு குறையத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் அதிமுகவில் இணைக்கக் கட்சித் தலைமை காய்நகர்த்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் கொங்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபகாலமாகத் திமுக தலைமையிடம் இருந்து செந்தில் பாலாஜி சற்று விலகியே இருப்பதாகப் பேசப்படும் சூழலில், அவரை மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் சக்திவாய்ந்த தலைவராக விளங்கும் செந்தில் பாலாஜி அதிமுகவிற்கு வரும்பட்சத்தில், கட்சியில் தனக்கு எதிராக உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தும் மற்றொரு கொங்கு நிர்வாகியான எஸ்.பி.வேலுமணியைக் கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகப் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் பாஜக தரப்பிலிருந்தும், மறுபுறம் வழக்குகள் தொடர்பான சட்ட ரீதியான நெருக்கடிகளும் அதிகரித்து வரும் சூழலில், செந்தில் பாலாஜியின் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழக அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.