தாராபுரம், மதுராந்தகம் வாக்காளர்கள் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
Oct 4, 2026, 17:50 IST
இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்குச் சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்றும் தீய எண்ணத்தோடு, குறுக்கு வழியில் நடத்தப்பட்ட திரைமறைவுச் செயல்களுக்குப் பாடம் புகட்ட மக்கள் முழுமையாகத் தயாராகிவிட்டனர்" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"இனி யாருக்கும் இதுபோன்ற துரோகச் சிந்தனைகளே எழாத வகையில், வாக்காளர்கள் தங்களின் வாக்குகள் மூலம் தக்க பதிலடி கொடுத்து ஒரு வரலாற்று நிகழ்வைப் படைக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.