சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 

புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தமிழின் இனிமையையும் பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றல் மூலம் உலகெங்கும் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என்றும், அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

நகைச்சுவை கலந்த பேச்சின் மூலமாக மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும் நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் சேர்த்த பெருமை அவருக்கு உண்டு என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.