தவெக சார்பில் கல்வி உதவித்தொகை, பாராட்டுச் சான்றிதழ்... இன்று முதல்வர் விஜய் நேரில் வழங்குகிறார்!

 

தவெக சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் 2-ஆம் கட்டப் பரிசளிப்பு விழா சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்.

ஆண்டுதோறும் த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டு வரும் இந்தக் கல்வி விருதுகளின் இந்த ஆண்டிற்கான முதற்கட்ட நிகழ்ச்சி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று பகல் 2.00 மணிக்கு நடைபெறும் 2-ஆம் கட்ட விழாவில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர்.

விழாவிற்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை நண்பகல் 12.00 மணிக்குள் விழா அரங்கிற்குள் அழைத்து வந்து அமர வைக்க வேண்டும் எனத் த.வெ.க. மாவட்டச் செயலாளர்களுக்கு அமைச்சர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நாளை சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சாதனை மாணவ-மாணவியருக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.