நாளை முதல் அமலுக்கு வருகிறது... ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடி உயர்வு - நெய் லிட்டருக்கு ₹80 வரை அதிகரிப்பு!

 

ஆவின் நிறுவனம் நெய், தயிர், மோர், பால் கோவா மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட உப பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை அக்டோபர் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

1 லிட்டர் ஆவின் நெய் விலை ₹80 உயர்ந்து, ₹700-ல் இருந்து ₹780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி நெய் ₹365-ல் இருந்து ₹400 ஆகவும், 200 மி.லி நெய் ₹160-ல் இருந்து ₹180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1 கிலோ தயிர் விலை ₹10 உயர்த்தப்பட்டுள்ளது. 500 மி.லி தயிர் பாக்கெட் ₹35-ல் இருந்து ₹40 ஆக அதிகரித்துள்ளது. 200 மி.லி மோர் பாக்கெட் ₹2 உயர்ந்துள்ளது.

200 மி.லி மில்க் ஷேக் பாட்டில்கள் ₹30-ல் இருந்து ₹35 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. 250 கிராம் மைசூர் பாகு உள்ளிட்ட இனிப்பு வகைகள் ₹15 முதல் ₹20 வரை உயர்ந்து ₹160 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் பால் பொருட்களின் இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.