நாளை முதல் அமல்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!
டாஸ்மாக் கடைகளில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாளை முதல் புதிய ஊதியம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.33,000 ஆக உயர்த்தப்படுகிறது. விற்பனையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது. உதவி விற்பனையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.28,000 ஆக உயர்த்தப்படுகிறது.
ஊழியர்களுக்குத் ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும். ஊதிய உயர்வுடன் சேர்த்து, தினசரி 8 மணி நேர வேலை, வாராந்திர விடுமுறை மற்றும் தற்செயல் விடுப்புகள் உள்ளிட்ட 6 முக்கிய நல அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இது டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.