உடனடி அமல்... தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக 5 உயர் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆர். சிவப்பிரசாத் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதப்படை பிரிவு டி.ஐ.ஜியாக பொறுப்பு வகித்து வந்த விஜயலட்சுமி, சென்னை ஊர்காவல்படை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி எஸ்பியாகப் பணியாற்றி வந்த சண்முகப்பிரியா, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்பியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மீரா, சென்னை மயிலாப்பூரில் உள்ள தலைமை டிஜிபி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.