எகிப்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்! பல பெட்டிகள் தடம் புரண்டு 7 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

 

 

எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே சுமார் 76 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இந்த விபத்து நிகழ்ந்தது. கிசாவிலிருந்து ஃபயூம் நோக்கிச் சென்ற ரயில், கெய்ரோவிலிருந்து அஸ்வான் நோக்கிச் சென்ற மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதியது. இதில் பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளை அகற்ற கிரேன்களும் பயன்படுத்தப்பட்டன.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.