நெகிழ்ச்சி வீடியோ... முதலமைச்சருக்கு பூங்கொத்து கொண்டு வந்த மோப்ப நாய் 'ராக்கி'

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற கம்பீரமான காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய்க்கு அளிக்கப்பட் வரவேற்பில் 'ராக்கி' என்ற மோப்ப நாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, காவல்துறையின் துப்பறியும் பிரிவைச் சேர்ந்த 'ராக்கி' என்ற மோப்ப நாய், தனது வாயில் அழகிய பூங்கொந்தைக் கவ்வி எடுத்துவந்து முதலமைச்சரிடம் வழங்கி அவருக்கு வரவேற்பு அளித்தது.

மோப்ப நாயின் இந்தச் நேர்த்தியான செயலால் நெகிழ்ந்த முதலமைச்சர் விஜய்யும், விழாவில் கலந்துகொண்ட காவல் அதிகாரிகளும் அதனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் கண்டறிதல், வெடிமருந்துகளைக் கண்டறிதல் மற்றும் தடைகளைத் தாண்டுதல் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்ற காவல் மோப்ப நாய்களின் வியக்க வைக்கும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மைதானத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி மோப்ப நாய்களின் திறமையைப் பாராட்டினர்.