undefined

அமைச்சர் கார் மோதி முதியவர் படுகாயம்!  

 

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து மதுரை சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.அந்த வகையில்  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காரில் மதுரை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டார்.

 

அவரது காருக்கு பின்னால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளின் கார்கள் வந்து கொண்டிருந்தன. தனிச்சியம் பிரிவு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அதில் ஒரு கார் திடீரென, சித்தாலங்குடியில் வசித்து வரும் 60 வயது  ராஜேந்திரனை ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலையில் படுகாயம் அடைந்தார். கால் முறிவும் ஏற்பட்டது. உடனடியாக அவர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த கார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் எனவும், ஆனால் விபத்து நடந்தபோது அவர் காரில் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!