தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு...இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்!
தமிழக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது இறுதிக்கட்ட பிரசாரத்திற்காகச் சென்னையில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அவர் மேற்கொள்ளும் இந்த அதிரடி பிரசாரம் உடன்பிறப்புகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மாலை பிரசாரம் முடிவடைவதைத் தொடர்ந்து, தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் வாக்குப்பதிவு தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.