மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: தரவு சரிபார்ப்புக்கான நடவடிக்கை என விளக்கம்!

 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் தரவு சரிபார்ப்புத் தொடர்பான நோட்டீைஸ அனுப்பி வைத்துள்ளது.

இது வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கை அல்ல என்றும், தற்போதைய மற்றும் முந்தைய எஸ்ஐஆர் தகவல்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாத காரணத்தினாலேயே இந்தச் சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.