ஜூலை 27ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டசபை தேர்தல்!
ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு என்று தனியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டசபை கட்டமைப்புகள் இயங்கி வருகின்றன. அங்கு மொத்தம் உள்ள 53 சட்டசபை இடங்களில் 45 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலமாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 8 இடங்களுக்கு நியமன முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும்.
இந்த 45 தொகுதிகளுக்கான புதிய சட்டசபை தேர்தல் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் ஜூலை 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 20 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். விருப்பமில்லாதவர்கள் தங்களது வேட்புமனுக்களை ஜூன் 30 ஆம் தேதி வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அடுத்த மாதம் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 27 ஆம் தேதி இறுதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.