கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி பலி!  

 

சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் உள்ள அரசு விடுதிக்கு அருகே உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஜெயசந்திரன் என்ற தனியார் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நேற்று நள்ளிரவில் நண்பருடன் வெளியே சென்றுவிட்டு இன்று காலை திரும்பிய அவர் சாலை தடுப்புச்சுவரை கடக்க முயன்றபோது அருகில் இருந்த மின்கம்பத்தை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.