இரும்புக் கதவை திறக்க முயன்ற போது சோகம்... மின்சாரம் பாய்ந்து பாட்டியும் ,பேரனும் பலி... !
Sep 5, 2026, 21:00 IST
நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி பகுதியில் வசித்து வருபவர் இந்திராணி. இவர் தனது பேரனுடன் ஒரே வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் இரும்புக் கதவைத் திறக்க முயன்ற இந்திராணி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.இவர் அலறி கூச்சலிட்டுள்ளார்.
பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அவருடைய பேரன் ஓடி வந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது பேரன் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.