எலக்ட்ரீசியன்களுக்கு மாதந்தோறும் ரூ.22 லட்சம் சம்பளம் - அமெரிக்காவில் ஏஐ துறையின் அசுர வளர்ச்சியால் அதிரடி உயர்வு!
Sep 29, 2026, 09:10 IST
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையின் அசுர வளர்ச்சியால் ஏற்பட்ட மின் தேவை காரணமாக, 30 வயதுக்குட்பட்ட திறமையான எலக்ட்ரீசியன்களுக்கான மாதச் சம்பளம் சுமார் ரூ.22 லட்சமாக உயர்ந்துள்ளது. இது பல முன்னணி ஏஐ என்ஜினீயர்களின் ஊதியத்தை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான ஏஐ டேட்டா சென்டர்களுக்குத் தடையில்லா மின்சாரக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன்களுக்கு நிலவும் கடும் பற்றாக்குறையே இந்த சம்பள உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தற்போது நிலவும் இந்த உச்சக்கட்டத் தேவையால், பாரம்பரிய தொழில்நுட்பப் பணிகளை விட எலக்ட்ரீசியன் பணிக்கான மவுசு அமெரிக்காவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.